மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை சம்பந்தமாக சப்-இன்ஸ்பெக்டர்வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Update: 2021-09-26 21:23 GMT
வாடிப்பட்டி, 
வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியில் உள்ள காப்பகத்தில் சேலத்தை சேர்ந்த ஜான்சன் மகள் ஷாலினி (வயது18) தங்கி 12&ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தாய், தந்தையை இழந்ததால் கடந்த 6 மாதமாக இங்கு தங்கியுள்ளார். இவர் நேற்றுமுன்தினம் மதிய உணவு சாப்பிட்டபின் உடன் இருந்தவர்களிடம் மேற்படிப்பு படிக்க விருப்பமில்லை என்ற மனஅழுத்தத்தில் இருந்தவர் தூங்க செல்வதாக கூறி அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுசம்பந்தமாக காப்பக நிர்வாகி கொடுத்தபுகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்