தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்- அமைச்சர்கள் பங்கேற்பு
கடையநல்லூரில் தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. சார்பில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கடையநல்லூரில் நடந்தது. கூட்டத்திற்கு கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், பத்திரப்பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கபாண்டியன், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை வரவேற்றார். தென்காசி மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், வருவாய் துறை அமைச்சருமான கே.கே.எஸ். எஸ்ஆர்.ராமச்சந்திரன் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சேக்தாவூது, மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம், பேபி ரஜப் பாத்திமா, தலைமை கழக பேச்சாளர் இஸ்மாயில், ஒன்றிய செயலாளர்கள் ராமையா, ரவிசங்கர், நகர செயலாளர்கள் சேகனா, ரஹீம், ராஜ்காந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.