விவசாயியை மிரட்டியவர் கைது
தேவர்குளம் அருகே விவசாயியை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
பனவடலிசத்திரம்:
தேவர்குளம் அருகே உள்ள வடக்கு அச்சம்பட்டி ஊரைச் சேர்ந்தவர் ஆபிரகாம், விவசாயி. இவரது சித்தி மகன் சுந்தராஜன் என்பவர் அதே ஊரைச் சேர்ந்த செல்வகுமாரின் உறவினர் மகளை விரும்பியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆபிரகாம் தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வகுமாருக்கும், ஆபிரகாமுக்கும் இடையே திருமணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார், ஆபிரகாமை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தேவர்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார்.