சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி பெண்ணுக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டினார்.

Update: 2021-09-26 20:07 GMT
தென்காசி:
தென்காசி அலங்கார் நகரைச் சேர்ந்த ஈஸ்வர ராஜ்&கோமதி தம்பதியரின் மகள் சண்முகவள்ளி. பி.இ. பட்டதாரியான இவர் கடந்த 2020- ல் நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 108-வது இடத்தையும், தமிழக அளவில் 3-வது இடத்தையும், பெண்கள் பிரிவில் தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். இதையொட்டி தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சண்முகவள்ளியின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.
சாதனை படைத்த சண்முகவள்ளி ‘கூறும்போது, நான் இந்த பதவியை ஒரு வாய்ப்பாக கருதுகிறேன். என் சேவையை செம்மையாக செய்வேன், என்றார்.

மேலும் செய்திகள்