பஸ் மோதி தொழிலாளி சாவு

சிவகிரி அருகே பஸ் மோதி தொழிலாளி இறந்தார்.

Update: 2021-09-26 19:57 GMT
சிவகிரி:
சிவகிரி அருகே பஸ் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா பாம்புக்கோவில் சந்தை அருகே உள்ள வெள்ளக் கவுண்டன்பட்டி இந்திரா நகரை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் உடையார் (வயது 30). இவருக்கு கற்பகசெல்வி என்ற மனைவியும், 3 வயதில் சகாதேவ் என்ற மகனும் உள்ளனர். இவர் விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன்புத்தூர் அருகே தனியார் குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
உடையார் நேற்று அதிகாலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக வெள்ளக்கவுண்டன்பட்டியில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தென்காசி& மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி ஊருக்கு தென்புறம் தொட்டிச்சிமலை ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளில் மோதியது.

பரிதாப சாவு

இதில் உடையார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்&இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் எட்வர்ட் (41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்