புரட்டாசி மாதம் எதிரொலி மீன்கள் விலை சரிவு; மீன்கள் விலை சரிவு
மீன்கள் விலை சரிவு; மீன்கள் விலை சரிவு;
புதுக்கோட்டை:
புரட்டாசி மாதத்தில் பெருமாள் பக்தர்கள் அசைவ உணவை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம். மேலும் அறிவியல் ரீதியாகவும் புரட்டாசி மாதம் அசைவ உணவு தவிர்த்தல் நல்லது என கூறப்படுகிறது. இதன் காரணமாக அசைவ உணவை விரும்பி சாப்பிடுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துவிடும். இதனால் இறைச்சிகளின் விலைகள் சற்று சரிவடைவது வழக்கம். இந்த நிலையில், புதுக்கோட்டையில் மீன்களின் விலைகள் சற்று சரிவடைந்துள்ளது. ரூ.50 முதல் ரூ.100 வரைக்கும் குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். புதுக்கோட்டையில் சில்லரை வியாபார கடை ஒன்றில் விற்பனையான மீன்களின் விலைகள் கிலோ கணக்கில் வருமாறு:- கட்டமுறல் ரூ.250-க்கும், கலிங்கா முறல் ரூ.300-க்கும், கருப்பு கலிங்கா ரூ.250-க்கும், கெண்டை ரூ.120-க்கும், கிழங்கா ரூ.150-க்கும், நெத்திலி ரூ.200-க்கும், ஊளி ரூ.200-க்கும் விற்பனையானது. மொத்த விற்பனை கடைகளில் இவற்றின் விலையை விட சற்று குறைவாக மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல ஆட்டிறைச்சி, கோழிறைச்சிகளின் விலைகளும் சற்று குறைந்திருந்தன. அசைவ உணவு பிரியர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமையில் இறைச்சிகளை வழக்கம் போல வாங்கிச்சென்றனர்.