வாலாஜா நகராட்சியில் அடிக்கடி குடிநீர் வினியோகம் துண்டிப்பு

வாலாஜா நகராட்சியில் அடிக்கடி குடிநீர் வினியோகம் துண்டிப்பு

Update: 2021-09-26 17:58 GMT
வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி தமிழகத்தின் முதல் நகராட்சி ஆகும். வாலாஜாபேட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தினமும் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த மாதத்தில் 5 நாட்களுக்கு ஒரு முறையும் 10 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் நகராட்சி மூலம் குடிநீர் செய்யும் இடங்களில் உவர்ப்பு நீராக வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் முன்னறிவிப்பு இன்றி அடிக்கடி குடிநீர் வினியோகம் துண்டிக்கப்படுகிறது.  

இதுகுறித்துக் கேட்டால் பாலாற்றங்கரையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் குடிநீர் உவர்ப்பு நீராக வருகிறது என நகராட்சி சார்பாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், நகராட்சி ஆணையாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக 24 வார்டுகளில் இருக்கும் பொதுமக்களும், முன்னாள் கவுன்சிலரும் தகவல் தெரிவிக்கிறார்கள். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வாலாஜாபேட்டை நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு உரிய குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

மேலும் செய்திகள்