கள்ளக்குறிச்சியில் இன்று நடக்கிறது அ தி மு க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
கள்ளக்குறிச்சியில் இன்று நடக்கிறது அ தி மு க வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாடூர் திருமண மண்டபத்தில் இன்று பகல் 12 மணியளவில் நடக்கிறது. இதற்கு மாவட்ட செயலாளரும் தேர்தல் பொறுப்பாளருமான குமரகுரு தலைமை தாங்குகிறார். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான டாக்டர் விஜயபாஸ்கர், மோகன், எம்.சி.சம்பத் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் வழியாக காலை 11 மணிக்கு திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி.சி.ஏ.சந்தோஷ் இல்லத்துக்கு வருகிறார். அங்கு புதுமண தம்பதி எஸ்.கே.டி.சி.ஏ.சந்தோஷ்-மோனிஷா ஆகியோருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவிக்கும் அவர் சிறிது நேர ஓய்வு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும் மாடூர் திருமண மண்டபத்தை சென்றடைகிறார்.