கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி

புதுவையில் புதிதாக 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-09-26 16:52 GMT
புதுச்சேரி, செப்.
புதுவையில் புதிதாக 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 
2 பேர் பலி 
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 677 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 78 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. புதுச்சேரியில் 50 பேரும், காரைக்காலில் 19 பேரும், மாகியில் 9 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 90 ஆக உயர்ந்துள்ளது. 
தற்போது ஆஸ்பத்திரிகளில் 119 பேர், வீடுகளில் 782 பேர் என 901 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 107 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர். அதாவது புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருபுவனை வள்ளலார் நகரை சேர்ந்த 55 வயது ஆணும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் முருகராம் நகரை சேர்ந்த 57 வயது ஆணும் பலியாகி உள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,838 ஆக உயர்ந்துள்ளது. 
புதுவை மாநிலத்தில் தொற்று பரவல் 1.67 சதவீதமாகவும், குணமடைவது 97.83 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாக உள்ளது.
தடுப்பூசி 
நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 528 பேர் முதல் கட்ட தடுப்பூசியையும், 8 ஆயிரத்து 73 பேர் 2&வது கட்ட தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர். இதுவரை 9 லட்சத்து 71 ஆயிரத்து 937 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்