மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த வாலிபர் கைது
மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த வாலிபர் கைது
சாத்தான்குளம், செப்.27-
சாத்தான்குளம் முகமதியர் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் மகன் கலீஸ் ரகுமான் (வயது 35). இவருக்கும், அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த அஷ்ரப் அலி மகன் முகமது அலி (24) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், முகமது அலி, கலீஸ் ரகுமான் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்த கலீஸ் ரகுமானின் மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டு எரித்துவிட்டு முகமது அலி தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து முகம்மது அலியை கைது செய்தார்.