வீடுபுகுந்து திருடிய 2 வாலிபர்கள் கைது

வீடுபுகுந்து திருடிய 2 வாலிபர்கள் கைது

Update: 2021-09-26 16:40 GMT
கயத்தாறு, செப்.27-
கோவில்பட்டி கதிரேசன் மலைப்பகுதியில் வீரவாஞ்சி நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சுடலை (வயது 20). அதே தெருவை சேர்ந்த துரை மகன் சுரேஷ்(23). இந்த இருவரும் நேற்று கயத்தாறு அருகிலுள்ள சத்திரப்பட்டி கிராம தெருக்களில் பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட கழிவு பொருட்களை தெருக்களில் சேகரிப்பது போல் பூட்டிக் கிடந்த வீடுகளை நோட்டமிட்டுள்ளனர். அப்போது பூட்டிக் கிடந்த சுப்பையா என்பவரின் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கினர். இதனை அப்பகுதியில் உள்ள மூதாட்டி நாகம்மாள் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் கூறியுள்ளார். அந்த இருவரும் வீட்டிற்குள் பொருட்களை திருடிக் கொண்டிருந்த நிலையில்,  கிராம மக்கள் ஒன்று திரண்டு வீட்டை சுற்றி வளைத்து நின்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்ற பொதுமக்கள் அந்த 2பேரையும் கையும் களவுமாக பிடித்து, கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி திலீப் வழக்குப்பதிவு சுடலை, சுரேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

மேலும் செய்திகள்