கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு

கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு

Update: 2021-09-26 15:40 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 546 மையங்களில் நடைபெற்றது. ஆற்காடு ராசாகோடு நகராட்சி தொடக்கப்பள்ளி, பெரிய குக்குண்டி தொடக்கப்பள்ளி, திமிரி ஒன்றியம் கணியனூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி, ராணிப்பேட்டை நகர ஆரம்ப சுகாதார நிலையம், கங்காதரா முதலியார் நிதிஉதவி பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த முகாம்களை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
பொதுமக்கள் குறைவாக இருந்த மையங்களில் பணியாளரிடம், வீடு வீடாக சென்று தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களை அழைத்து வந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு மையத்திற்கும் ஒதுக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்தி முடிக்கும் வகையில் தாசில்தார்கள் ஒவ்வொரு முறையும் கண்காணித்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் பாபுராஜ், தாசில்தார்கள் கோபாலகிருஷ்ணன், ஷமீம், ரவி, ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்