27 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

27 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

Update: 2021-09-26 15:40 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று 485 வாக்குச்சாவடி மையங்கள், 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. 

இம்முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை போட்டு கொண்டனர்.
கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாம்களை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரடியாக சென்று ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் 27 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்