தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் தொழில் முனைவோருக்கான பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் தொழில் முனைவோருக்கான பயிற்சி நடந்தது;
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் Õகடல் உணவுப் பொருள் தயாரிப்பு தொழில் தொடங்குதல் குறித்த பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு கல்லூரி முதல்வர் சுஜாத்குமார் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். உதவி பேராசிரியர் கணேசன் வரவேற்று பேசினார். அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர்கள் சண்முகசெல்வ சிவசங்கரி, தங்கசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பயிற்சியில் மீன் தொழில் முனைவோரின் பண்புகள் மற்றும் கடல் உணவுப்பொருள்களில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் மற்றும் அவை சார்ந்த தொழில் தொடங்குவதற்கான நிதிவழிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கடற்பாசி சேர்த்த அடுமனை உணவுப்பொருட்கள், மீன்சேர்த்த ரொட்டி தோய்ந்த உணவுப்பொருட்கள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பயிற்சி நிறைவு விழாவில் தூத்துக்குடி கடல் உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் துணை இயக்குநர் அசோக்குமார் கலந்து கொண்டு, மீன் உணவுப்பொருள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.