நிரம்பி வழியும் காவனூர் ஏரியில் ஆடு பலியிட்டு வழிபாடு
நிரம்பி வழியும் காவனூர் ஏரியில் ஆடு பலியிட்டு வழிபாடு
கே.வி.குப்பம்
கே.வி.குப்பத்தை அடுத்த காவனூர் ஏரி 489 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 2017&ம் ஆண்டுக்குப்பின் கடந்த 2020&ம்ஆண்டு டிசம்பர் மாதம் நிரம்பி வழிந்தது. தற்போது ஆந்திர எல்லையில் பருவமழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்தநிலையில் கடந்த 23&ந் தேதி காவனூர் ஏரி முழு கொள்ளளவையும் எட்டியது. வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரி நிரம்பி வழிவதால் பொதுமக்கள் சார்பில் ஏரித்திருவிழா ஏற்பாடு செய்தனர்.
அதன்படி ஏரி நிரம்பி வழியும் பகுதியில் வாழைமரத் தோரணங்கள் கட்டப்பட்டு, ஆட்டுக்கு மஞ்சள் பூசி, மாலை அணிவித்து தீப ஆராதனை செய்து பலி இட்டனர். தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மூலம் காவனூர், கொத்தமங்கலம், கரசமங்கலம், கழிஞ்சூர், திருமணி உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகள் பாசன நீர் வசதி பெறுவார்கள். உபரிநீர் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து பலர் விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் ஏரி உபரிநீர் செல்ல வழி இல்லாமல் ஆக்கிரமிப்பு வயல்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.