ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் அசாமில் முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய அசாம் காவல்துறையை கண்டித்தும், மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், காயல்பட்டினம் சீதக்காதி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் அஷ்ரப் அப்துல்லாஹ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் அப்துல் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொருளாளர் முகமது உமர், சி.எப்.ஐ. இயக்கத்தின் மாவட்ட தலைவர் பேர்ஸ், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் நஜீப், ம.தி.மு.கவின் மாவட்ட பொருளாளர் காயல் அமானுல்லா ஆகியோர் பேசினர். நகர செயலாளர் அப்துர் ரஹ்மான் நன்றி கூறினார்.