கம்பத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கம்பத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கம்பம்:
மத்திய அரசை கண்டித்து கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொ.மு.ச உள்பட தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் மண்டல துணைதலைவர் முருகன் தலைமை தாங்கினார். மத்திய சங்க செயலாளர் மாசானம், திண்டுக்கல் மண்டல சி.ஐ.டி.யு. துணை பொது செயலாளர் மணிகண்டன், எச்.எம்.எஸ் செயலாளர் மூவேந்தன், விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்க செயலாளர் சிவமுருகன், சி.ஐ.டி.யு. கம்பம் கிளை தலைவர் வீரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, தனியார் மயமாக்கல், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிடக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் தொ.மு.ச. மற்றும் கூட்டணி தொழிற்சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.