உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஊரப்பாக்கத்தில் 7 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்; 2 பேர் கைது

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஊரப்பாக்கத்தில் வீட்டில் பதுக்கி வைத்த 7 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-09-26 11:20 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பாடசாலை தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அந்த வீட்டில் 2 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து வீடு முழுவதும் போலீசார் அதிரடியாக சோதனையிட்டனர். அங்கு 7 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து வீட்டிலிருந்த அஷ்வந்த் (வயது 28), உஷா (55) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அவர்களிடமிருந்து, 7 நாட்டு வெடிகுண்டுகள், ஒரு பட்டா கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சதீஷ், அரவிந்த் ஆகிய 2 பேரையும் வலைவீசி தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

ஊரப்பாக்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் 7 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்