ஈரோட்டில் காவிரி ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
ஈரோட்டில், காவிரி ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு
ஈரோட்டில், காவிரி ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் தற்கொலை
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, திடீரென பாலத்தில் ஏறி காவிரி ஆற்றில் குதித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுபற்றி கருங்கல்பாளையம் போலீசாருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் இறந்த நிலையில் அந்த வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.
வாழ பிடிக்கவில்லை
இதைத்தொடர்ந்து கருங்கல்பாளையம் போலீசார் இறந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட வாலிபர், ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (வயது 31) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது மனைவி காயத்திரியிடம் (27) செல்போனில் பேசி உள்ளார். அப்போது அவர், தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், மகன் மிதுனை (6) நன்றாக பார்த்துக்கொள் என்றும் கூறிவிட்டு காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.