சொத்து தகராறில் மாடுக்கு விஷம் வைத்தவர் கைது

மாடுக்கு விஷம் வைத்தவர் கைது

Update: 2021-09-25 21:21 GMT
திருமங்கலம்,
கள்ளிக்குடி அருகே உள்ள மருதங்குடியைச் சேர்ந்தவர் மருதப்பன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மகள் மருதி (38). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. மருதியின் தாத்தா சொத்தை தனது தந்தையிடம் கேட்டு உள்ளார். சொத்தை கொடுப்பதற்கு தந்தை மறுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை மருதி தன்னுடைய மாட்டிற்கு குடிக்க தண்ணீர் வைத்துள்ளார். மருதப்பன் விஷத்தை கலக்கிய தாக கூறப்படுகிறது. இதை அறிந்த மருதி தண்ணீரைக் குடிக்க விடாமல் மாட்டை காப்பாற்றினார். இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதப்பனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்