தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாள் விழா
தென்காசியில் தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி:
தென்காசி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக பா.ஜ.க. நிறுவனர் பண்டித தீனதயாள் உபாத்தியாயா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மேலப்புலியூர் வாய்க்கால்பாலம் பகுதியிலுள்ள இசக்கியம்மன் கோவிலில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மண்டல பார்வையாளர் ஆனந்தி முருகன், நகர பொதுச்செயலாளர்கள் நாராயணமூர்த்தி, ராஜ்குமார், நகர பொருளாளர் சேகர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.