கொரோனாவுக்கு பெண் பலி

கொரோனாவுக்கு பெண் உயிரிழந்தார்.

Update: 2021-09-25 20:17 GMT
மதுரை, 
மதுரையில் நேற்று 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 15 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 470 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 27 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 19 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 73 ஆயிரத்து 53 பேர் குணம் அடைந்துள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 253 ஆக உள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1164 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்