வாணியம்பாடியில் 2 மணி நேரம் பெய்த பலத்தமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

வாணியம்பாடி பகுதியில் 2 மணிநேரம் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீர் புகுந்தது. இதனை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-25 19:11 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி பகுதியில் 2 மணிநேரம் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீர் புகுந்தது. இதனை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பலத்த காற்றுடன் மழை

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று சுமார் 2 நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது, இதனால் வாணியம்பாடி நியூடவுன், அம்பூர்பேட்டை, கோணாமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து தெருக்களில் ஓடியது. கோணாமேடு பகுதியில் கழிவு நீர் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு மழைநீருடன் கலந்து வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளகினர். 
கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை சீர்செய்ய வலியுறுத்தி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள்  
வாணியம்பாடியில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் வாகனங்களை மறித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் பேசுவதாக வாக்குறுதி அளித்தார். அதன் பின்னர் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

வெள்ளக்காடானது

இதேபோல வாணியம்பாடி&வளையாம்பட்டு மேம்பால பகுதியில் மழைநீர் வெள்ளக்காடாக தேங்கி நின்றது, இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். சாலையில் 3 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியதால் அதில் சென்ற பல வாகனங்கள் பழுதடைந்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். 

மேலும் செய்திகள்