கிராவல் மண் திருட்டு; 2 பேர் கைது

சோமநாதபுரம் அருகே கிராவல் மண் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-25 19:06 GMT
காரைக்குடி,

சோமநாதபுரம் போலீஸ் சரகம் சங்கராபுரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 5 யூனிட் கிராவல் மண் கடத்தப்படுவது தெரிய வந்தது. உடனடியாக அந்த லாரியும், கடத்தப்பட்ட கிராவல் மண்ணும் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கடத்தி வந்த கமுதியை சேர்ந்த கருப்புசாமி (வயது35) காரைக்குடி வைரபுரம் நேரு நகரைச் சேர்ந்த முருகேசன் (28) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்