காட்டுப்பட்டியில் காணாமல் போன நாயை டிரோன் மூலம் தேடும் பணி தீவிரம்

காணாமல் போன நாயை டிரோன் மூலம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-09-25 19:06 GMT
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி ஊராட்சி வெள்ளையாண்டிபட்டியில் கடந்த 18-ந்தேதி மாலை ஆசிரியர் செல்வின் அன்பரசு என்பவரின் வீட்டு வளர்ப்பு நாயான ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய் அப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதில் வீட்டில் இருந்து வெளியே ஓடியது. கழுத்தில் செயின் அணிந்து இருப்பதால் வயல்வெளிகளில் செடி கொடிகளில் ஏதேனும் சிக்கி உள்ளதா என ஆசிரியர் மற்றும் அவரது உறவினர்கள் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாயை தேடும் முழு முயற்சி எடுத்த ஆசிரியர் டிரோன் உதவியுடன் காட்டுப்பட்டி ஊராட்சியை சுற்றியுள்ள கிராமங்களில் டிரோன் கோமரா மூலம் நாயை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்