உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு நடத்தாததால் ரூ.2,500 கோடி நிறுத்தம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க.அரசு நடத்தாமல் இருந்ததால் தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.2,500 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
திருப்பத்தூர்
உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க.அரசு நடத்தாமல் இருந்ததால் தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.2,500 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
பேட்டி
தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று திருப்பத்தூருக்கு வந்தார். இங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது;
தமிழகத்தில் 9 மாவட்டத்தில் வாக்காளர் வரைவு பட்டியல் தயார் செய்யவில்லை என கூறி உள்ளாட்சி தேர்தலை கடந்த முறை ஆட்சி செய்த அ.திமு.க.அரசு நடத்தவில்லை இதனால் தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.2 ஆயிரத்து 500, கோடியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்திற்கு செய்ய வேண்டிய ஏராளமான வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் ரூ.2Ñ லட்சம் கடன் சுமையை ஏற்றி வைத்தது அ.தி.மு.க.அரசு.
அதே நேரத்தில் கடந்த 4 மாதங்களில் தி.மு.க.அரசு பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. ஆனால் தி.மு.க. அரசு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை என முன்னாள் முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரசார கூட்டங்களில் குற்றம்சாட்டி வருகிறார். இது அனைத்தும் பொய்யாகும்.
பஸ்சில் இலவச பயணம்
கடந்த ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு கேட்டு அலைந்து கொண்டிருந்தார்கள். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் ரத்து, செய்தது என நான்கு மாதங்களில் 200 வாக்குறுதிகளை முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலர் சொத்து குவித்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதனால்தான் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது நல்லதம்பி எம்.எல்.ஏ., தி.மு.க.நகரச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.