பேக்கரி கடை ஊழியர் வெட்டிக்கொலை
நள்ளிரவில் மர்ம கும்பல், பேக்கரி கடை ஊழியரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கமுதி,
நள்ளிரவில் மர்ம கும்பல், பேக்கரி கடை ஊழியரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பேக்கரி ஊழியர் வெட்டிக்கொலை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முஷ்டக்குறிச்சியை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் செல்வலிங்கம் (வயது 32). இவர் கமுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வலிங்கம் உயிரிழந்தார்.
7 பேர் மீது வழக்கு
இந்தசம்பவம் தொடர்பாக கமுதி துணை சூப்பிரண்டு பிரசன்னா, இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
செல்வலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி, 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக செல்லத்துரை என்பவரை போலீசார் கைது செய்தனர்.