மேலும் 91 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா. சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி;

Update: 2021-09-25 18:36 GMT
திருப்பூர்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 584-ஆக உள்ளது. 
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 92 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 677&ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 954 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 953&ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு முழுவதும் கட்டுக்குள் வராமல் இருப்பதால் பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும் செய்திகள்