ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குவா, குவா

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Update: 2021-09-25 18:26 GMT
கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த வேம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி சித்ரா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 108 ஆம்புலன்சில் சித்ராவை திமிரி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு ஏற்றி சென்றனர். 

வழியில் சித்ராவுக்கு பிரசவ வலி அதிகமானதால் 12.45 மணிக்கு மருத்துவ உதவியாளர் சுந்தரமூர்த்தி உதவியுடன் பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பிறந்தது. 

பின்னர் தாயும் சேயும் திமிரி சுகாதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

மேலும் செய்திகள்