ராணிப்பேட்டை மாவட்டத்தில் 140 ரவுடிகள் கைது
உள்ளாட்சி தேர்லை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 140 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை
உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடைபெறும் பொருட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவின்பேரில் 140 ரவுடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 50 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 90 பேர் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உதவி கலெக்டர்கள் முன் போலீசாரால் ஆஜர்படுத்தி, எச்சரிக்கை செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.