நாகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதால் நாகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது
நாகப்பட்டினம்:
மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவடைந்து கலிங்கப்பட்டினத்திற்கு சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது வலுவடைந்து, வடக்கு ஆந்திரா, ஒடிசா மாநிலம் இடையே இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை கரையை கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.