யூரியா கலந்த தண்ணீரை குடித்த 17 தொழிலாளர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

உளுந்தூர்பேட்டையில் யூரியா கலந்த தண்ணீரை குடித்த 17 தொழிலாளர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

Update: 2021-09-25 17:05 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பழைய நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து என்பவர் தனது தோட்டத்தில் உள்ள கரும்புகளுக்கு சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சி வருகிறார். இதில் தண்ணீருடன் யூரியா உரத்தையும் கலந்து பாய்ச்சியதாக தெரிகிறது. ஆனால் இதை அறியாமல் அந்த பகுதியில் கூலி வேலை செய்து கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொட்டு நீர்பாசன குழாய்களில் இருந்து வழிந்த தண்ணீரை பருகினர்.

இதைப் பார்த்து வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சிலர்  தண்ணீரில் யூரியா கலந்து இருந்ததை தொழிலாளர்களிடம் கூறினார்கள். இதை அடுத்து யூரியா கலந்த தண்ணீரை குடித்த பறையன் அன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி சுந்தரி (வயது 38), ஏழுமலை மனைவி சுகுணா(30), அய்யனார் மனைவி ரம்யா(20), அண்ணாமலை மனைவி லட்சுமி(65), ராமலிங்கம் மனைவி சின்னபொண்ணு(65), ஆறுமுகம் மனைவி இந்திரா(35) உள்பட 17 பேரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்