திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை வழக்கில் கைதானவரின் காலில் 'மாவுகட்டு'
திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை வழக்கில் கைதானவரின் காலில் மாவுகட்டு போடப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை வழக்கில் கைதானவரின் காலில் 'மாவுகட்டு' போடப்பட்டது.
கைதானவருக்கு 'மாவுகட்டு'
திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்தவர் ஸ்டீபன். தொழிலாளி. இவர், கடந்த 22&ந்தேதி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், திண்டுக்கல்லை அடுத்த சாமியார்பட்டியை சேர்ந்த மன்மதனும் (வயது 32) ஒருவர் ஆவார்.
இவர் வலது கால் முறிந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காலில் Ôமாவுகட்டுÕ போடப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாலத்தில் இருந்து குதித்தார்
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலையாளிகளை பிடிக்க மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்&கரூர் சாலையில் நந்தவனப்பட்டி பகுதியில் போலீசார் இரவு ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வேகமாக வந்தார். இரவு நேரத்தில் வந்ததால் அவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.
ஆனால் அந்த வாலிபர் போலீசாரை கண்டதும் அங்குள்ள மேம்பாலத்தில் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து விட்டார். மேம்பாலத்தில் இருந்து குதித்ததால் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் எழுந்து ஓடமுடியாமல் கிடந்தார். இதையடுத்து அருகில் சென்று பார்த்த போது அவர், ஸ்டீபன் கொலை வழக்கில் தேடப்பட்ட மன்மதன் என்பதும், போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயன்றதும் தெரியவந்தது.
இதனால் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் அவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார் என்றனர். அதன்படி நேற்று மதியம் அவர் மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டார். கொலை வழக்கில் கைதானவர் காலில் மாவுகட்டு போடப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.