கார் மோதி தொழிலாளி பலி
ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புங்கவர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 62) கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் விலக்கில் தனது மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் ராஜதுரை மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜதுரை சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜில்லா பீர்முகமது, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பலியான ராஜதுரை உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து எப்போதுவென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் ராஜபாளையம் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேசன் (29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.