கோவையில் 198 பேருக்கு கொரோனா

கோவையில் 198 பேருக்கு கொரோனா

Update: 2021-09-25 16:19 GMT
கோவையில் 198 பேருக்கு கொரோனா

கோவை

கோவையில் நேற்று புதிதாக 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து இதுவரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது பெண், 65 வயது ஆண், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது ஆண், 75 வயது முதியவர் என 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இவர்களுடன் சேர்த்து இதுவரை 2, 329 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 223 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 2 லட்சத்து 37 ஆயிரத்து 137 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 95 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்