போடி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

போடி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-09-25 16:10 GMT
போடி:
போடி அருகே விசுவாசபுரத்தில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போடி புறநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டின் பின்புறம் கேரளாவுக்கு கடத்துவதற்காக 30 மூட்டைகளில்  1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவர்கள் யார் ? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்