வாலாஜாபாத் அருகே டிராக்டர் வாங்கிய கடனை கட்ட வற்புறுத்தியதால் விவசாயி தற்கொலை
வாலாஜாபாத் அருகே டிராக்டர் வாங்கிய கடன் தவணையை கட்ட வற்புறுத்தியதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 40). விவசாயி. இரு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி. இவருக்கு தேவி (35) என்ற மனைவியும், அர்ஷன் எனும் 11 மாத கைக்குழந்தையும் உள்ளனர். மனோகரன் விவ சாய பணிகளுக்காக தனியார் நிதி நிறுவனத்தின் கடனுதவி யில் தவணை முறையில் டிராக்டர் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.
தவணை செலுத்தி வந்த நிலையில் கொரோனா கால கட்டத்தில் கடன் தவணை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலை யில் டிராக்டருக்கு கடன் வழங்கிய தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் கடனை கேட்டு வற்புறுத்திய தாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக விவசாயி மனோகரன் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற் கொலைக்கு முயன்ற நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி மனோ கரன் பரிதாபமாக உயிரிழந் தார். இந்த சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரேத பரி சோதனை முடிந்த மனோகரன் உடலை குடும்பத்தினர் பெற மறுத்து தற்கொலைக்குத் தூண்டிய தனியார் நிதி நிறு வனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மனோகரன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலி யுறுத்தி காஞ்சீபுரம்-செங்கல் பட்டு நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர்.
கிராம மக்களின் திடீர் சாலை மறியல் காரணமாக 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.