பொன்னேரி அருகே பாம்பு கடித்து விவசாயி பலி
பொன்னேரி அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
பொன்னேரி,
பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் அன்பழகன் (வயது 63). விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது விவசாய நிலத்திற்கு சென்றபோது, நிலத்தில் வரப்பு பகுதியில் இருந்த விஷப்பாம்பு கடித்துவிட்டது. வலியால் துடித்துக்கொண்டிருந்த அன்பழகனை அங்கிருந்தவர்கள் மீட்டு, பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.