மாடு முட்டியதில் விவசாயி சாவு
திருவள்ளூர் மாவட்டம் மாடு முட்டியதில் விவசாயி பரிதாபமாக பலியானார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மேல்செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகையா (வயது 61) விவசாயி. இவர் கடந்த 8-ந்தேதி காலை தனது நிலத்திற்கு ஏர் உழவு செய்ய மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்றார்.
அப்போது மாடு ஒன்று திடீரென முட்டி வீசியதில், படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 22-ந்தேதி இரவு நாகையா பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து நேற்று வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.