ஈரோட்டில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா

ஈரோட்டில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

Update: 2021-09-24 21:34 GMT
ஈரோடு
ஈரோட்டில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
பா.சிவந்தி ஆதித்தனார்
தினத்தந்தி அதிபர் மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா நேற்று ஈரோட்டில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பனி மன்றம் ஈரோடு மாவட்டம் சார்பில், ஈரோடு திருநகர் காலனி பகுதியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு மாவட்ட துணைத்தலைவர் செல்வம் உதயம் தலைமை தாங்கி, பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் நகர தலைவர் சண்முகம், செயற்குழு உறுப்பினர் ராதா, ஈரோடு மாவட்ட நாடார் சங்க உறுப்பினர்கள் முருகேசன், மோகன்ராஜ், வேல்பாண்டி, செல்லச்சாமி, பாண்டி, வேலுச்சாமி, ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
நாடார் சங்கம்
இதேபோல் ஈரோடு மூலப்பட்டறை பகுதியில், ஈரோடு மாவட்ட நாடார் மஹாஜன சங்கம் சார்பில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடாப்பட்டது. இந்த விழாவுக்கு மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பொருளாளரும், ஈரோடு மாவட்ட நாடார் மஹாஜன சங்க கவுரவ தலைவருமான ஏ.மாரியப்பன் தலைமை தாங்கி, பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் செயலாளர் ராஜேஷ் குமார், துணைத்தலைவர் கதிர்வேல், இணைச்செயலாளர் செல்லவேல், சங்க ஆலோசகர் ராமகிருஷ்ணன், மகளிர் அணி தலைவி ஹேமலதா, செயலாளர் சாந்தி, நிர்வாகிகள் பழனிச்சாமி, வேலாயுதம், செல்வம், மகுடபதி, சேகர், கருக்கவேல் ஈரோடு நாடார் உறவின்முறை சங்க செயலாளர் விஜியகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.  

மேலும் செய்திகள்