தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-09-24 21:19 GMT

குடிநீர் பிரச்சினை தீருமா?
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் தாத்தாத்திரிபுரம் ஊராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக பல முறை அரசு பஸ்களை மறித்து சாலை மறியல் செய்தும் பலன் அளிக்கவில்லை. எனவே அந்த பகுதி பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
கோகுல் ராஜா, புதுச்சத்திரம், நாமக்கல்.
===
சாலை விரிவாக்கம்
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் சின்ன சீரகாபாடியில் காமராஜர் காலனி உள்ளது. சின்ன சீரகாபாடி தேர் மைதானத்தில் இருந்து காமராஜர் காலனி வரை சாலை சுமார் 20 அடி முதல் 26 அடி வரை அகலமாக இருந்தது. நாளடைவில் ஆக்கிரமிப்பால்  சாலை 4 அடி முதல் 6 அடி வரை சுருங்கி விட்டது. இதனால் சாலையில் ஆக்கிரமிப்பை சரிசெய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சின்ன சீரகாபாடி, சேலம்.
===
சேறும் சகதியுமான சாலை
சேலம் கோரிமேட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழிலாளர் நல அலுவலகம் மற்றும் அதன் சங்கங்களும் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு செல்லும் சாலை சுமார் 100 மீட்டர் தூரம் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கி-றது. இதில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த சாலையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சேலம்.
===
குளம்போல் தேங்கும் கழிவுநீர்
சேலம் மாநகராட்சி 5-வது வார்டு அன்னை தெரசாநகர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம்போல் தேங்கி காட்சி அளிக்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதுதவிர பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. எனவே உயர் அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரஸ்வதி, சேலம்.
சேலம் 8-வது வார்டு, 4-வது குறுக்கு தெரு சின்னதிருப்பதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. மழைக்காலங்களில் அந்த இடம் முழுவதும் மழை நீர் நிரம்பிவிடுவதால் சாக்கடை கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி விடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்ல் பரவக்கூடிய அபாயம் உள்ளது. கடந்த 8 வருட காலமாக இதுபோல் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&கோபால், சின்-ன-தி-ருப்-பதி, சேலம்.
===
இடிந்து விழும் நிலையில் குடிநீர்தொட்டி 
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், கல்லிபுரம் மேற்கு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பழுதாகி மோசமான நிலையில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டு வருகிறோம். புகார் கூறிய சில நாட்-களில் அதிகாரிகள் வந்து குடிநீர் தொட்டியை பார்வையிடுவார்கள். அதன்பிறகு இந்த தொட்டி தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் அருகில் அங்கன்வாடி, பள்ளிக்கூடம் மற்றும் வீடுகள், மின்கம்பம் உள்ளதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் என்ன ஆகுமோ? என்ற அச்சம் அந்த பகுதி மக்களிடையே உள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கிராம மக்கள், பென்னாகரம், தர்மபுரி.
===
பஸ் வசதி வேண்டும்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் வாணக்காரன் புதூரில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் இருந்து மெயின் ரோட்டிற்கு செல்வதற்கு போதுமான வாகன வசதி இல்லை. எனவே புதுச்சத்திரம் அல்லது பெருமாள் கோவில் மேடு, பஸ் நிறுத்தம் வருவதற்கு வாணக்காரன் புதூர் வழியாக பஸ் வசதி செய்து தந்தால் பெரும் உதவியாக இருக்கும்.
ஊர்பொதுமக்கள், வாணக்காரன் புதூர், நாமக்கல்.
பயன்படாத குப்பை வண்டி(படம் உண்டு)
சேலம் ஆண்டிபட்டி பஞ்சாயத்து பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்துச் செல்ல துப்புரவு பணியாளர்களுக்கு குப்பை வண்டி கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி ஒதுக்கப்பட்ட வண்டிகளில் ஒரு வண்டி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் அந்த வண்டி பழுதாகி உள்ளது. எனவே அந்த குப்பை வண்டி பழுதை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிகண்டன், ஆண்டிபட்டி, சேலம்.
===
போலீசார் கவனத்துக்கு...
தர்மபுரி மாவட்டம் புறநகர் பஸ் நிலையம் உள்ளேயும், நகராட்சி கடைகளின் முன்பும் பொதுமக்களின் நடை பாதைகளிலும் விபசார அழகிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே இதுதொடர்பாக போலீசார் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்செல்வி, தர்மபுரி.
===

மேலும் செய்திகள்