சிறந்த சட்டசபை உறுப்பினராக எடியூரப்பா தேர்வு

சிறந்த சட்டசபை உறுப்பினராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2021-09-24 20:45 GMT
பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தில் நேற்று சபாநாயகர் காகேரி பேசும்போது கூறியதாவது:-
நடப்பு ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த சட்டசபை உறுப்பினர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாடாளுமன்றத்தில் பின்றபற்றப்படுகிறது. அதே போல் சட்டசபைகளிலும் சிறப்பாக செயல்படும் உறுப்பினர் ஒருவரை தேர்ந்தெடுத்து விருது வழங்கலாம் என்று சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார். அவரது ஆலோசனையை ஏற்று நான் இந்த நடைமுறையை அறிமுகம் செய்துள்ளேன்.

சிறந்த உறுப்பினரை தேர்ந்தெடுக்க எனது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல்&மந்திரி, சட்டசபை விவகாரத்துறை மந்திரி, எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மூத்த உறுப்பினர் ஆர்.வி.தேஷ்பாண்டே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். சிறந்த உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான சிறந்த உறுப்பினராக முன்னாள் முதல்&மந்திரி எடியூரப்பாவை தேர்ந்தெடுத்துள்ளேன்.
இவ்வாறு காகேரி பேசினார்.

அதைத்தொடர்ந்து எடியூரப்பா, சபாநாயகர் பீடத்திற்கு வந்து, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் இருந்து சிறந்த உறுப்பினருக்கான விருது பெற்றார். அவருக்கு கேடயம் ஒன்று வழங்கி பாராட்டினார்.

மேலும் செய்திகள்