விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

வெம்பக்கோட்டையில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-09-24 19:49 GMT
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் சார்பில் நுண்ணீர் பாசனம் என்ற தலைப்பில் சல்வார் பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வெம்பக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் முத்துசெல்வி முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் மாரியப்பன் வரவேற்றார். பயிற்சியில் விரிவாக்க பொறியாளர் ரேவதி கூறுகையில், நுண்ணீர் பாசனம் என்பது சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்தூவுவான் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்றவர்களுக்கு 70 சதவீதமும் வழங்கப்படுகிறது. அதற்கு சிறு,குறு விவசாயிகள் சிறு,குறு விவசாயி என்பதற்கான சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் வேளாண்மை உதவி அலுவலர் முத்துக்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் மாரிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்