காரில் கடத்தி வந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல்

காரில் கடத்தி வந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல்

Update: 2021-09-24 19:06 GMT
திருப்பத்தூர்

கந்திலியை அடுத்த பெரியகரம் எட்டிகுட்டை பகுதியை சேர்ந்தவர்கள் பெங்களூரில் இருந்து மது பாட்டில்களை காரில் கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் கந்திலி சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெரியகரம் அருகே அப்புகொட்டாய் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. காரை ரோந்து பணியில் இருந்த தனிப்படையினர் சோதனை செய்ததில் காரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் இருந்தது.
அதைத்தொடர்ந்து காரில் இருந்த பெரியகரம் எட்டிகுட்டை, பகுதியைச் சேர்ந்த சின்னவன் மகன்கள் சின்னதம்பி (30), சிதம்பரம் (27)  ஆகிய இருவரையும் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்