லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள செக்போஸ்ட் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல், தடுப்பு புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் சத்யபிரியா மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டாரஸ் லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில், 23 ஆயிரத்து 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கீற்றபள்ளி, எர்டிகா பாளையத்தை சேர்ந்த சேகர் (வயது 42), குமார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் ரேஷன் அரிசியுடன், லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.