5 கிலோ கலப்பட டீ தூள், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

5 கிலோ கலப்பட டீ தூள், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Update: 2021-09-24 18:19 GMT
ஆம்பூர்

ஆம்பூரில் உள்ள பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, பிளாஸ்டிக் பைகள் விற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஆம்பூர் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி நேற்று முன்தினம் பல்வேறு கடைகளில் ஆய்வு செய்தார். 

அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா 1 கிலோ இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்து அந்த கடைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் ரெட்டிதோப்பு பகுதியில் நடத்திய சோதனையில் ஒரு கடையில் 4 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடை உரிமையாளருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் இருந்த டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஆம்பூர் நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று அழிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்