1 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது

பூவந்தி அருகே 1 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-24 17:30 GMT

திருப்புவனம்,

பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது கிளாதரி லெட்சுமிபுரம் பகுதி. இந்தப் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு தலைமையில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மதயானை (வயது 55) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்