ஆழ்வார்திருநகரியில் தொழிலாளி தவறி விழுந்து சாவு
ஆழ்வார்திருநகரியில் தொழிலாளி தவறி விழுந்து இறந்து போனார்;
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரியில் உள்ள செங்கல் சூளையில் சிவராம மங்கலத்தைச் சேர்ந்த சந்தனம் (வயது 65) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம்போல் வேலை பார்த்தபோது திடீரென கீழே விழுந்தார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி விசாரணை நடத்தி வருகிறார்