தேனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-09-24 15:02 GMT
தேனி:
அசாமில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தப்பட்டதை கண்டித்து, தேனி பள்ளிவாசல் அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர தலைவர் முகமது உமர் தலைமை தாங்கினார். தேனி புதுபள்ளிவாசல் ஜமாத் செயலாளர் சர்புதீன், எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்க பிரிவு மாவட்ட தலைவர் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் முனீஸ்வரன், சமூக நல்லிணக்க பேரவை பொருளாளர் நாகராஜ், அனைத்து இந்திய இமாம் கவுன்சில் மாநில தலைவர் சம்சுதீன் இக்பால் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்