விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு

விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

Update: 2021-09-24 14:57 GMT
போடி:
போடி அருகே உள்ள சன்னாசிபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. இவரது வீட்டுக்குள் நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராடி அங்கு பதுங்கி இருந்த சுமார் 7 அடி நீளமுள்ள நாகபாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. 

மேலும் செய்திகள்